திருவாரூர் அக், 25
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் ரூ.19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினர்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, திருவாரூர் நகரசபை உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நல அலுவலர் பாலசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.