திருவாரூர் அக், 20
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி மற்றும் பயிற்சி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கண்காட்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாளர் விஸ்வந்த் கண்ணா, காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பொதுமேலாளர் சரவணா, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.