Author: Seyed Sulthan Ibrahim

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று.

அரியலூர் செப், 24 கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து வந்த போதிலும் ஆங்காங்கு மாவட்டங்களில் ஒரு சில பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவ்வகையில்அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 12 பேர்…

புரட்டாசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

நெல்லை செப், 24 தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன. 108 திவ்யதேச ஸ்தலங்களில் இடம் பெற்றுள்ள இத்தகைய கோவில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம் தென்திருப்பேரை திருக்கோளூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில்…

மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி.

விருதுநகர் செப், 24 விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவி முனீஸ்வரி தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார் இந்தநிலையில் ஆட்சியர் மேகநாதரெட்டியை மாணவி முனீஸ்வரி சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் உள்ளார்.

பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 24 தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற டைரக்டராக இருந்த பாரதிராஜா இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு 81 வயதாகிறது. கடந்த மாதம் பாரதிராஜாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

இந்து அறநிலையத்துறை சார்பாக புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா.

சென்னை செப், 24 இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத ஆன்மிகச் சுற்றுலாவை சென்னை – வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு , மதிவேந்தன்…

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.

டெல்லி செப், 24 காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அக்டோபர் 19 ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல்…

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – ஷபாஸ் ஷெரீப் .

நியூயார்க் செப், 24 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாபொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள்…

முக்காடு போட்டு விவசாயிகள் முற்றுகை போராட்டம்.

திருச்சி செப், 24 பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் பென்சன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க மறுப்பதை கண்டித்தும், வாழை விவசாயிகளுக்கு…

அரசு விருந்தினர் மாளிகையில் மனித உரிமை மீறல்கள் குறித்த 25 வழக்குகள் விசாரணை.

நெல்லை செப், 24 நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 29 ம்தேதி மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை கடைசியாக நடைபெற்றது.…

மேகமலையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

தேனி செப், 24 ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி சார்பில் மேகமலை பகுதியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அப்பள்ளியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு களப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலித்தீன்…