Author: Mansoor_vbns

வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு.

சென்னை ஜூலை, 6 திராவிடர் கழகத் தலைவர் வீரமணி (91) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி, மயக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீன்களின் விலை குறைவு.. அலைமோதும் மக்கள் கூட்டம்!

நாகப்பட்டினம் ஜூலை, 6 ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது. சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சென்னையில் மீன்கள் விலை குறைந்து 1 கிலோ நெத்திலி- ₹150, சீலா- ₹350,…

ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 உயர்ந்த தங்கம்.

சென்னை ஜூலை, 6 தங்கம் விலை ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. கடந்த 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 22 கேரட் 1 கிராம், ₹8,985-க்கும், சவரன் ₹71,440-க்கும் விற்பனையான நிலையில், இன்று (ஜூலை 6) 1 கிராம் ₹9,060-க்கும், ₹72,480-க்கும்…

சிக்கன் விலை உயர்வு.

நாமக்கல் ஜூலை, 6 வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை…

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம்.

சென்னை ஜூலை, 6 பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 7) முதல் தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 14-ம் தேதி முதல் தொடங்குவதாக TNEA அறிவித்துள்ளது.…

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி ஜூலை, 6 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம்…

பாஜகவின் திட்டம் பலிக்காது: அன்வர் ராஜா பாய்ச்சல்.

சென்னை ஜூலை, 6 தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு கிடைக்காது…

கீழக்கரையில் காவிரி குடிநீர் விநியோகமின்றி மக்கள் அவதி!

கீழக்கரை ஜூலை, 6 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தெரு குழாய்களும் உண்டு. இந்நிலையில் கடந்த 12 நாட்களாக காவிரி குடிநீர் விநியோகம் தடை…

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு மாதம் ₹15,000.

புதுடெல்லி ஜூலை, 2 முதல்முறை வேலைக்கு செல்லும் அனைவருக்கும் மாதம் ₹15,000 வரை ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.…