Month: April 2024

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்.

திருவண்ணாமலை ஏப்ரல், 23 அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களும், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்…

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் ஜானகி.

ஏப்ரல், 23 தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி. இதுவரை 48,000 பாடல்கள்வரை பாடியிருக்கும் ஜானகி அம்மாவுக்கு பல தலைமுறை ரசிக படையாக இருந்துவருகிறது. அவர் தனது குரலில் காட்டும் பாவங்களை மற்ற பாடகர்கள் அவ்வளவு எளிதாக காட்டிவிட முடியாது என்பதுதான்…

அன்றாட உணவில் சுண்டைக்காய் எடுத்துகொள்ளவதால் கிடைக்கும் பயன்கள்:

ஏப்ரல், 23 காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது. ஆஸ்துமா, வறட்டு…

இலவச கல்வி சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்.

சென்னை ஏப்ரல், 22 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. இதன் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.…

சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.

மதுரை ஏப்ரல், 22 மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6:30 மணி அளவில் நடைபெற்றது. மாசி வீதிகளில் தேரை வடம் பிடிக்கவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யவும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இதையொட்டி…

நேரடி வரி வசூல் ₹19,58,000 கோடியை தாண்டியது.

புதுடெல்லி ஏப்ரல், 22 மத்திய 2023-24 ம் நிதி ஆண்டில் வருமான வரி கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல் 18 சதவீதம் அதிகரித்து 19 லட்சத்து 58 ஆயிரம் கோடி வசூல் ஆகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில்…

மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கம்.

சென்னை ஏப்ரல், 22 மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கி உள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயதுவரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு…

சட்டவிரோத உறுப்பு மாற்று மீது கடும் நடவடிக்கை.

புதுடெல்லி ஏப்ரல், 22 சட்டவிரோதமாக உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு தனது கடிதத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரும் வெளிநாட்டினர் தகவல்களை…