புதுடெல்லி ஏப்ரல், 22
சட்டவிரோதமாக உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு தனது கடிதத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரும் வெளிநாட்டினர் தகவல்களை மத்திய அரசு அனுப்ப வேண்டும். மேலும் அறிவுரை மீதான நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.