சென்னை ஏப்ரல், 22
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. இதன் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தில் சேர விரும்புவோர் மே 18ம் தேதி வரை என்ற rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் மே 27ம் தேதி தகுதியானவர் விபரம் அறிவிக்கப்படும்.