புதுடெல்லி ஏப்ரல், 22
மத்திய 2023-24 ம் நிதி ஆண்டில் வருமான வரி கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல் 18 சதவீதம் அதிகரித்து 19 லட்சத்து 58 ஆயிரம் கோடி வசூல் ஆகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில் இதன் மதிப்பீடு 18 லட்சத்து 45 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டிருந்தது. இதே போன்று மறைமுக வரி வசூலும் ரூ.14,84,000 கோடி கிடைத்துள்ளது. இது மதிப்பீட்டை விட மிகவும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.