Month: January 2023

4.87 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்.

நெல்லை ஜன, 4 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15 ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ரூ.1,000…

பனப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்.

கோயம்புத்தூர் ஜன, 3 நெகமம் கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டி கிராமத்தில் பனப்பட்டி கால்நடை மருத்துவ மையத்தின் சார்பில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு கால்நடை மருத்துவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார், முகாமில் பனப்பட்டி…

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு ஜன, 3 செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் செலவில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டம் கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்ற…

வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திருப்பூர் ஜன, 3 திருப்பூர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 264 ம் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாரப்பாளையம் பிரிவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பெருந்துறை தொகுதி சட்டமன்ற…

பத்து ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரை புதுப்பிக்க தகவல்.

அரியலூர் ஜன, 3 அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள், தங்கள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அனைவரும் இணைய தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகில்…

மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.

நெல்லை ஜன, 3 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவிலில் உள்ள மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று ஷஅதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பெருமாளுக்கு,…

மீண்டும் தொடங்குகிறது பாதயாத்திரை.

உத்திரபிரதேசம் ஜன, 3 9 நாட்கள் இடைவேளைக்கு பிறகு ராகுல் காந்தி இன்று தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார்‌. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை 110 நாட்கள் 3000 கிலோமீட்டர் நிறைவு செய்துள்ள இந்த பயணம் இன்று உத்தரப்பிரதேசத்தில் இருந்து…

யுபிஐ பரிவர்த்தனை 12.82 லட்சம் கோடி.

புதுடெல்லி ஜன, 3 கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூபிஐ மூலம் செலுத்தப்பட்ட பரிவர்த்தனை 12.82 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த அக்டோபரில் முதன்முறையாக யுபிஐ ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது. நவம்பரில் ரூ.11.90 லட்சம் கோடி மதிப்பிலான…

ஜனவரி 17ம் தேதி தான் கடைசி நாள் முந்துங்கள்.

சென்னை ஜன, 3 கல்லூரி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. தேர்வு கட்டணத்தை ஜனவரி 18ம் தேதி இரவு 11:50 மணிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப…

ஜனவரி 12ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகள்.

சென்னை ஜன, 3 பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50,000 பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள்…