திருப்பூர் ஜன, 3
திருப்பூர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 264 ம் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாரப்பாளையம் பிரிவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் பகுதி கழகச் செயலாளர் ஹரிஹரசுதன், வேலுமணி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ஊத்துகுளி ஒன்றிய கழக செயலாளர்கள் ரவிசந்திரன், தனசேகர், மாவட்ட கவுன்சிலர்கள சக்திவேல், கண்ணம்மாள், வட்டக் கழக செயலாளர்கள் மாணிக்கம், ராஜேஷ், நிர்வாகிகள் விஸ்வநாதன், தங்கராஜ் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு மைய நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர்.