திருப்பூர் ஜன, 2
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சியில் குளம், குட்டைகள், ஏரி உட்பட்ட பல்வேறு இடங்களில் மரம் வளர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வீடு தோறும் மரம் வளர்ப்போம் திட்டம் தற்போது நடைமுறை படுத்தப்படுகிறது. ஊராட்சி மன்றதலைவர் மலையாண்டவர் நடராஜன் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பழ வகை மரங்கள் மற்றும் அரளி பூ செடிகள் உட்பட பல்வேறு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.