Spread the love

திருப்பூர் ஜன, 2

தமிழ்நாட்டில் 45 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. காவல்துறையில் 45 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தும் இதில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு நியமனம் செய்துள்ளள்ளனர். மதுரை காவல் ஆணையராக நாயர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், மகேஷ்குமார் உள்ளிட்ட 9 பேருக்கு பதவி உயர்வு அளித்து ஆணை பிறப்பித்துள்ளனர். கல்பனா நாயகர், வன்னிய பெருமாள், பிரவீன்குமார், பகலவன், மயில்வாகனன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் ஐஏஎஸ், இணை அரசு செயலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சியாமளா தேவி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மோகன்ராஜ், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாசபெருமாள் நியமனம் செய்து உத்தரவு அளித்துள்ளனர்.

A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *