சென்னை ஜன, 3
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50,000 பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.