சென்னை ஜன, 3
பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி ஜனவரி 8 வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு, வழங்கப்படும் தேதி நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்கும். அதை வைத்து பயனாளர்கள் பொங்கல் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 9ல் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.கஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.