Month: January 2023

நள்ளிரவில் நிலநடுக்கம். இரண்டு பேர் பலி.

ஈரான் ஜன, 29 ஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். அங்கிருக்கும் கோய் நகரில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.44க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் விக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது .எழுபது பேர் படு காயங்களுடன்…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. மூன்று பேர் பலி.

அமெரிக்கா ஜன, 29 அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்று இந்த மாதத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த நான்காவது…

பழங்குடியின குடும்பங்கள் குறித்து சார் ஆட்சியர் ஆய்வு.

திருவள்ளூர் ஜன, 29 மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு…

மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்.

வேலூர் ஜன, 29 வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் வேலூர்…

விழுப்புரம்-கடலூர் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம்.

விழுப்புரம் ஜன, 29 விழுப்புரம்- கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…

குரூப்-3ஏ பணிகளுக்கான தேர்வு.

சென்னை ஜன, 29 குரூப்-3ஏ பதவிகளில் வரும் கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கத்தின் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களில் 14 இடங்களுக்கும், தொழில் மற்றும் வர்த்தக துறையில் ஸ்டோர் கீப்பர் பணியிடத்தில் ஒரு இடத்துக்கும் என மொத்தம் 15 இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு…

ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

விருதுநகர் ஜன, 29 ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பேருந்து நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக…

நாடே உதயநிதியை நம்பித்தான் இருக்கிறது. அமைச்சர் பாராட்டு.

சேலம் ஜன, 28 சேலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கே.என் நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய நேரு, தம்பி உதயநிதி உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது.…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொடுத்த விருது வாபஸ்.

கரூர் ஜன, 28 குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் டாஸ்மாக்கில் சிறப்பாக பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இந்த விருதுகளை வழங்கிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. இதனால்…

இது தமிழ்நாடா வட மாநிலமா? வேல் முருகன் அறிக்கை.

திருப்பூர் ஜன, 28 திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் விரட்டியதாக வெளியான செய்தி வேதனை அளிப்பதாக தவாகா கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இது தமிழ்நாடு அல்லது வடமாநிலமா என்ற சந்தேகத்தை இந்நிகழ்வு எழுப்புகிறது. தமிழர்கள் ஒன்று…