விருதுநகர் ஜன, 29
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பேருந்து நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றினார்கள். மேலும் 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி, நில அளவையர் காளிமுத்து, காவல் ஆய்வாளர் ஆனந்த குமார், துணை ஆய்வாளர் பெருமாள்சாமி, சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் நேரடி கண்காணிப்பில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அசோக்குமார், வரிவசூலர் பலராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சேத்தூரில் நீண்ட இடை வெளிக்கு பிறகு கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.