சேலம் ஜன, 28
சேலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கே.என் நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய நேரு, தம்பி உதயநிதி உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே தெரியும் இந்த நாடும் இயக்கமும் உங்களை நம்பித்தான் இருக்கிறது நீங்கள் நினைப்பது போன்று சேலத்திலும் வெற்றி பெறுவோம் என்று பாராட்டி பேசினார்.