சேலம் டிச, 16
சேலத்தில் 60 ஆண்டுகளாக செயல்படும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி நிர்வாகத்தினரில் காலில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் விழுந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இந்த பள்ளியை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு சென்ற அவர் பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டினார். ஏற்கனவே அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாணவிகள் காலில் இவர் விழுந்தது குறிப்பிடத்தக்கது.