சென்னை டிச, 25
அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தால் 2026 தேர்தலில் இருந்து விலகி இருக்க தயார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று மீண்டும் மீண்டும் கூறிவரும் அவர் தான் இருப்பது இபிஎஸ்ஸுக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். 2021 தேர்தலின் போது இதே யுத்தியை பரிந்துரைத்ததாகவும் அவர் பேசியுள்ளார்.