Month: November 2022

கனமழையால் சென்னை உள்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை நவ, 2 வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4ம் தேதி வரை நீடிக்கும்…

ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை.

அரியலூர் நவ, 2 ரேஷன் கடையை முற்றுகை அரியலூர் நகராட்சியின் 15வது வார்டில் கீழத் தெருவில் ஒரு ரேஷன் கடை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடையில் 1,414 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. அரியலூர் நகரிலேயே…

12 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தங்கத் தேரோட்டம்.

ராமேஸ்வரம் நவ, 1 ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் கோவிலில் தங்கத்தேர் கடந்த 12 ஆண்டுகளாக பயனின்றி இருந்தது இது சீரமைக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது இதனை…

விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்தார் மோடி.

குஜராத் நவ, 1 குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய மோடி பாலம் இடிந்து விழுந்த…

நாமக்கல் நுகர்பொருள் வாணிப குடோன்களில் முறைகேடுகளை தவிர்க்க நவீன காமிரா பொருத்த நடவடிக்கை.

சேலம் நவ, 1 தமிழகத்தில் அரிசி, கோதுமை, பருப்பு, மண்எண்ணை போன்ற உணவுப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 1972-ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நிறுவப்பட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் பொருட்களை பாதுகாத்து…

31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.

திருப்பூர் நவ, 1 திருப்பூர் வடக்கு மாநகரம் 17 வார்டு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இந்நாள் வரை 31 ஆண்டு காலமாக மின்சார வசதி…

டி20 உலகக் கோப்பை- நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி.

பிரிஸ்பேன் நவ, 1 ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.…

திருப்புவனம் யூனியன் கூட்டம்.

சிவகங்கை நவ, 1 திருப்புவனம் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மன்றப் பொருள் தீர்மானங்களை மேலாளர் கார்த்திகா வாசித்தார்.…

தஞ்சை பெரிய கோவிலில் மேயர்- ஆணையர் ஆய்வு.

தஞ்சாவூர் நவ, 1 உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிறுவி தமிழர்களின் கட்டிடக்கலையை உலகறிய செய்த சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் “சதய விழா”வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் விழா…

மணப்பாடு பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம்.

உடன்குடி நவ, 1 தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்களின் சார்பாக ஆண்டு சிறப்பு முகாம் மாதவன்குறிச்சி ஊராட்சி அமராபுரம் கிராமத்தில் நடந்தது. இதில் மாதவன்குறிச்சி ஊராட்சி தலைவர் சேர்மத்துரை…