உடன்குடி நவ, 1
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்களின் சார்பாக ஆண்டு சிறப்பு முகாம் மாதவன்குறிச்சி ஊராட்சி அமராபுரம் கிராமத்தில் நடந்தது.
இதில் மாதவன்குறிச்சி ஊராட்சி தலைவர் சேர்மத்துரை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கருப்பசாமி, வார்டு உறுப்பினர் சுடலைவடிவு, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மைப்பணிகள், மரம் நடுதல், கால்நடை மருத்துவ முகாம் போன்றவை நடந்தது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர் டேனியல் செய்திருந்தார்.