நெல்லை நவ, 1
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஏர்வாடி, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் சிலரை ரகசிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று மேலப்பாளையம் காவல் துறையினர் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் அங்குள்ள காதர் மூப்பன் தெருவில் 4 வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணி முதல் நடந்த இந்த சோதனையையொட்டி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அதில் ஒரு வாலிபர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுதியில் வசித்து வந்தபோது ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.