நெல்லை நவ, 2
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மனுவில்,
நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். இப்பகுதியில் உள்ள வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பாசன விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை செய்ய அத்தியாவசியமாகவும், அவசரமாகவும் உள்ளதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.