Month: November 2022

நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

திண்டுக்கல் நவ, 2 நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டாச்சியர் தனுஷ்கோடி வரவேற்று பேசினார். மேலும் ஷநிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்பாநாயக்கன்பட்டி,…

இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹூசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவருக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது .

இளையான்குடி நவ, 2 சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இளம் வயதில் இரண்டு பல்கலைக்கழகங்களில் அரபி பாட திட்டக்குழு உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவர் பேராசிரியர் B. K. அப்துல் ஹாதிக்கு இந்தியா புக்…

மாற்றுத்திறனாளிகள் போராட்ட அறிவிப்பால் ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்ட காவல் துறையினர்.

தர்மபுரி நவ, 2 மாவட்ட மாற்று திறனாளிகள் தங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாதம் ஒருமுறை சார் ஆட்சியர் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை…

திட்டக்குடி அருகே மக்கா சோளத்தை நாசப்படுத்தும் காட்டு பன்றிகள். விவசாயிகள் வேதனை.

கடலூர் நவ, 2 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர், வசிஷ்டபுரம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் திடீரென காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய விளை நிலத்தில்…

அக்டோபர் மாதத்தில் ரூ.12 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை நடந்து சாதனை.

புதுடெல்லி நவ, 2 இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 730 கோடி…

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

அவுரங்காபாத் நவ, 2 அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு…

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவி திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மனு.

நெல்லை நவ, 2 நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மனுவில், நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.…

நகர் பகுதியில் பகுதி சபா கூட்டம்.

திருப்பூர் நவ, 2 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மண்டலம்-3, 49-வது வார்டு ஆர்.வி.இ நகர் பகுதியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தகவல்.

கோவை நவ, 2 கோவை மாநகராட்சி 63வது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியில், வட…

10 ஆண்டுகளுக்கு பிறகு உழவர் சந்தை துவக்கம். மகிழ்ச்சியில் விவசாயிகள்.

மாமல்லபுரம் நவ, 2 திருக்கழுகுன்றம் சந்தை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மைத்துறை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை துவங்கப்பட்டது. விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.…