தர்மபுரி நவ, 2
மாவட்ட மாற்று திறனாளிகள் தங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாதம் ஒருமுறை சார் ஆட்சியர் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை இடைத்தரகர்கள் மூலம் வழங்கும் நடைமுறையை பின்பற்றக்கூடாது என்பது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.