திருப்பூர் நவ, 2
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மண்டலம்-3, 49-வது வார்டு ஆர்.வி.இ நகர் பகுதியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், மாநகர ஆணையர் கிராந்தி குமார் பாடி, தெற்கு மாநகர செயலாளர் நாகராசன் அவர்களும் மாநகர பொறியாளர் முகமது சபியுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு அனைத்து துறை அலுவலர்கள் மூலம் மக்களின் குறைகளை எளிதில் நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ 30.05 கோடி மதிப்பீட்டில் 32.19 கிலோமீட்டர் 179 சாலை பணிகள் துவங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், திருப்பூர் மாநகராட்சியைபசுமை மாநகராட்சியாக மாற்றும் நோக்கத்தோடு பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திகள் பிரிவு.