திருப்பூர் நவ, 1
திருப்பூர் வடக்கு மாநகரம் 17 வார்டு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இந்நாள் வரை 31 ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாததால் சிரமப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக இப்பகுதிகளிலுள்ள திமுக கழக நிர்வாகி சுப்பிரமணியம், பாரதிநகர் சிபிஐ விஜய், உள்ளிட்டவர்கள் மின்சார பிரச்சனை தொடர்பாக மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச இணை பொதுச் செயலாளர் சரவணனிடம் தெரிவித்தனர். உடனடியாக இது குறித்து திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிடம் பொது மக்களின் நீண்ட காலமாக பிரதான கோரிக்கையான கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்க உடனடியாக வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகண்டு 31 ஆண்டு காலத்திற்கு பிறகு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோயிலுக்கு இன்று மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.
இதனால் இப்பகுதிகளிலுள்ள மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து மகிழ்ந்தனர்.
இது குறித்து இப்பகுதிகளிலுள்ள மக்கள் கூறுகையில் எங்களுடைய நீண்ட கால பிரச்சனையான கோவிலுக்கு மின்சார இணைப்பு பிரச்சனை குறித்து கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு முறை அரசு அதிகாரிகளிடமும் அரசாங்கத்திடமும் தெளிவாக எடுத்து கூறி புகார் அளிக்கப்பட்டும் எந்த விதமான பயனுமில்லை தற்போது இது தொடர்பாக கோரிக்கை வைத்தோம் உடனடியாக இது தொடர்பாக துரிதமாக உரிய நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.
மேலும் மின்சார ஒப்பந்த பணியாளர்கள் சின்னதுரை, நாகராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் ,
பொருப்பாளர்கள், மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கும் இப்பகுதிகளிலுள்ள அனைத்து பொதுமக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.