Month: October 2022

திருக்கோவிலூரில் காந்தி சிலைக்கு மரியாதை.

கள்ளக்குறிச்சி அக், 5 மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா மற்றும் கவுசிலர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர்…

பழனியில் முகாமிட்டுள்ள வடமாநிலத்தவர்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

திண்டுக்கல் அக், 5 உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து செல்வார்கள். அதேபோல் சபரிமலை சீசன் காலத்திலும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு…

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

கோயம்புத்தூர் அக், 5 பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பொங்காளியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் சிலர் வீடுகளில் உள்ள குழாயில் மோட்டார் அமைத்து குடிநீரை ஊறிஞ்சு எடுப்பதாக…

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா சமாதான பேச்சுவார்த்தை.

சென்னை அக், 5 நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004-ம்…

விஜயதசமியையொட்டி பள்ளிகள், கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி.

நெல்லை அக், 5 நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, 10 வது நாளன்று குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் புனித நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள். மழலை குழந்தைகளை…

ஜெயிலில் அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

வேலூர் அக், 5 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம் தன் மீது உள்ள…

எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்.

சென்னை அக், 5 தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 20 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது.…

டாஸ்மாக் கடைகள் 9 ம் தேதி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தூத்துக்குடி அக், 5 நபிகள் நாயம் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகை வருகிற 9 ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று தமிழக அரசால் மதுவிற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…

கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்.

தென்காசி அக், 5 கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்து ராமநாதபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் திரவியக்கனி தலைமை தாங்கினார். துணை தலைவர் அருள் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அயோத்தியாபுரிபட்டினம், பூலாங்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த…

கீழையூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கையெழுத்து இயக்கம்.

நாகப்பட்டினம் அக், 5 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனுக்கு ஓய்வு கால பலன்களை முழுமையாக வழங்க வலியுறுத்தி கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன்…