கள்ளக்குறிச்சி அக், 5
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா மற்றும் கவுசிலர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கோபி, அவை தலைவர் குணா, வர்த்தகர் சங்க தலைவர் ராஜா மற்றும் நகர் மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.