Spread the love

திண்டுக்கல் அக், 5

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து செல்வார்கள். அதேபோல் சபரிமலை சீசன் காலத்திலும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேற்கண்ட திருவிழாக்கள், சபரிமலை சீசன் காலத்தில் பழனி அடிவாரம், கிரிவீதி சாலையோரங்களில் அலங்கார பொருட்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெறும்.

இதற்காக சாலையோர பகுதியில் புதிது புதிதாக கடைகள் தோன்றும். இந்த கடைகளை பெரும்பாலும் வடமாநிலத்தவரே அதிகம் தொடங்குகின்றனர். வழக்கமாக பழனியில் முகாமிட்டுள்ள வெளிமாநிலத்தவர்களிடம் பழனி டவுன் காவல் துறையினர் சார்பில் ஆதார் கார்டு, அடையாள அட்டை போன்றவை சோதனை செய்யப்படும். அந்தவகையில் தற்போது தங்கி உள்ள வட மாநிலத்தவர்களிடம் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *