Spread the love

நெல்லை அக், 5

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, 10 வது நாளன்று குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் புனித நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள். மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம்.
அதன்படி இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இன்று தனியார் பள்ளிகளில் வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் டவுன் காந்திமதி அம்பாள் கோவில் எதிரே உள்ள சரஸ்வதி கோவிலுக்கு இன்று ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். அங்கு படிப்பை தொடங்குவதற்கு குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுதினர்.
சிலர் மஞ்சள் துண்டு களைக் கொண்டு குழந்தை களின் கையை பிடித்து அரிசியில் எழுத்துக்களை எழுதினர்.

இதேபோல் மாவட்டம் முழு வதும் தனியார் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக காலை முதல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. பள்ளியில் புதிய மாணவ-மாணவிகளுக்கு அட்சராப்பியாசம் வழங்க ப்பட்டது.
பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், முதன்மை முதல்வர் ராஜலட்சுமி, முதல்வர் முருகவேள், துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

பாளை மகாராஜா நகரில் உள்ள ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மேல்நிலைப் பள்ளியில் 3 வயது குழந்தைகளுக்கான வித்யாரம்பம் மழலையர் சேர்க்கை இன்று நடைபெற்றது.

இதனையொட்டி அந்த பள்ளி மற்றும் பெருமாள் புரம் லலிதா வித்யாஷ்ரம், வி.எம்.சத்திரம் ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் வித்யா கேந்திரா ஆகிய பள்ளிகளில் சேர்ப்பதற்காக சுமார் 70 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வந்திருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜெயேந்திர பள்ளி குழுமங்களின் இயக்குனர் ஜெயந்திரன் மணி, பள்ளி முதல்வர் மற்றும் டீன் ஜெயந்தி ஜெயந்திரன் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் ஏராளமான தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *