Month: October 2022

கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்.

நாமக்கல் அக், 31 நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகள், வடமாநிலங்கள்…

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம். ஆணை வழங்கிய முதலமைச்சர்.

சென்னை அக், 31 அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர், அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளிதழ்கள்,…

மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் வாழ்த்து.

மதுரை அக், 31 இந்திய மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ள மதுரையை சேர்ந்த சச்சின் சிவா என்பவர் தேர்வாகியுள்ளார். அவரை‌ பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, எஸ்.டி.பி.ஐ கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினரும்,மதுரை மண்டல செயலாளரான முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மதுரை தெற்கு…

அகரம்சீகூர் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

பெரம்பலூர் அக், 31 பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடை பெற்றது. முகாமிற்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். ஒகளூர் ஊராட்சி…

வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்.

ராணிப்பேட்டை அக், 31 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி…

அரசு பேருந்துகளில் 6 நாட்களில் 78 லட்சம் பேர் பயணம்.

சேலம் அக், 31 சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தினமும் 1,900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தில்…

அமைச்சர் பெரியகருப்பன் சொந்த நிதியில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்கள்.

சிவகங்கை அக், 31 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். இந்த…

வீடுகளில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தால் உரிமம் ரத்து.

திருப்பத்தூர் அக், 31 திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தால் அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் உரங்களை கடையில் வைத்து விற்பனை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை கலந்தாய்வு கூட்டம்.

திருவள்ளூர் அக், 31 திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறைகள் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மத்திய வீட்டு வசதி மற்றும்…

குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு.

விழுப்புரம் அக், 31 திண்டிவனம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திண்டிவனம் துணை ஆட்சியர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை…