சேலம் அக், 31
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தினமும் 1,900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் கடந்த 21 ம் தேதி முதல் 27 ம்தேதி வரை இயக்கப்பட்டது. சேலம் கோட்டத்தில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.2 கோடி வருவாய் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.