சிவகங்கை அக், 31
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் 150 கா்ப்பிணி தாய்மா ர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1000 தொகையை வழங்கினார். திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, துணை இயக்குநர் விஜய்சந்திரன், திட்ட அலுவலர் பரமேஸ்வரி, நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் புசலான், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் தங்கம், திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி சேகர், ஹரி சரண்யா, திருப்பத்தூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.