Month: August 2022

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் பிரமாண்ட மாரத்தான் போட்டி.

சென்னை ஆகஸ்ட், 8 மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, நேற்று கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் நேரடியாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.…

புதிய மின்மாற்றி அமைப்பு. சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் திறந்து வைத்தார்.

நெல்லை ஆகஸ்ட், 8 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையறிந்த சட்ட மன்ற…

அதிமுக பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை‌ ஆகஸ்ட், 8 அதிமுக. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.…

காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கங்கள் குவிப்பு.

பர்மிங்காம்‌ ஆகஸ்ட், 8 72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இன்றுடன் இந்த விளையாட்டு திருவிழா நிறைவடைய உள்ள நிலையில் 10-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை வென்று ரசிகர்களை…

கேரளாவில் கனமழை. மஞ்சள் எச்சரிக்கை.

திருவனந்தபுரம் ஆகஸ்ட், 7 கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு…

ஐ.என்.எஸ். ‘விக்ராந்த்’ போர்க்கப்பலை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்.

கொச்சி ஆகஸ்ட், 7 கொச்சி கப்பல் கட்டும் தளம், கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி முடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கி உள்ளது. இந்த…

தமிழ்நாடு முழுவதும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் . காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு.

சென்னை ஆகஸ்ட், 6 தமிழ்நாடு முழுவதும் 76 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜனனி பிரியா பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு பிரிவு…

கைத்தறித்துறை சார்பில் கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இங்கு சங்ககிரி, எடப்பாடி பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர்…

அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக நெல்லை பெண் நியமனம்

நெல்லை ஆகஸ்ட், 7 அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் என்பது தன்னாட்சி அரசு அமைப்பாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைமை…

பாலர் ஞாயிறு பண்டிகையையொட்டி தேவாலயங்களில் குழந்தைகளின் சிறப்பு பவனி.

நெல்லை ஆகஸ்ட், 7 தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டலம் சார்பில் பாலர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெற்றன. மேலப்பாளையம் சேகரத்திற்கு உள்பட்ட சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சபை ஊழியர்…