Spread the love

நெல்லை ஆகஸ்ட், 8

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதையறிந்த சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அப்பகுதியில் புதிய மின் மாற்றி அமைத்து, பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து செல்வதால் நொச்சிக்குளம் குளம் மறுகால் வாய்கால் சாணான்குளம் செல்லும் வாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து செய்து தரும்படியாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பின்பு பாளை மகாத்மா காந்திஜீ நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் அலுவலகத்தில் பணியாளர்களை சந்தித்து பேசினார். அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்பு அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
நெசவாளர் மக்களை பெருமைபடுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மின்சார துறை பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு தலைவர்கள், மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை உடனே படிக்க.

http://www.vanakambharatham24x7news.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *