Category: மாவட்ட செய்திகள்

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 10 கலை, பண்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மூன்று வருட சான்றிதழ் வகுப்பாக, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் போன்ற துறைகளுக்கு மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில்…

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.

சென்னை ஆகஸ்ட், 10 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க…

ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்சுகளை இயக்க தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நெல்லையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தலைவர் சுடலை குமார், தென்காசி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.…

மேற்குத்தொடர்ச்சி மலையில் உலக ஆதிவாசிகள் தின விழா

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காணி சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி இப்பகுதியை சேர்ந்த காணி பழங்குடியினரின் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது இந்த…

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளுடன் குவிந்த வியாபாரிகள்

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மேலப்பாளையத்தில் டக்கரம்மாள்புரம் சாலையில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, கருவாடு…

சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடிகள் வினியோகம்

நெல்லை ஆகஸ்ட், 9 பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் முன்பு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே நெல்லை மாநகரப் பகுதியில் பொது…

மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த தேசிய கொடி.

திருவாரூர் ஆகஸ்ட், 9 திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தேசிய கொடிகள் தைத்து தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர், மன்னார்குடி,…

கடல் மீன்கள் வரத்து இல்லாததால் வெறிச்சோடிய மீன் மார்க்கெட்

உடன்குடி ஆகஸ்ட், 9 தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி மெயின் பஜாரில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மணப்பாடு, குலசேகரன்பட்டினம், பெரியதாழை, ஆலந்தலை, அமலிநகர் மற்றும் சுற்றுப்புற கடற்கரை பகுதியில் இருந்து ஏராளமான கடல்மீன்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த மார்க்கெட்டுக்கு…

விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் விசைத்தறியாளர்கள் மனு

திருப்பூர் ஆகஸ்ட், 9 திருப்பூர் விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர். மின்கட்டண உயர்வு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.…

மலை கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் ஆகஸ்ட், 9 பேரணாம்பட்டு தாலுகா அரவட்லா மலை கிராம ஊராட்சியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அரவட்லா ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமாரி தலைமை தாங்கினார். மேலும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் கலந்து கொண்டு பழங்குடியினர், மற்றும்…