சென்னை ஆகஸ்ட், 10
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதனையடுத்து, மாமல்லபுரத்தில் இருந்து 69 குளிர்சாதன பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள் நடுவர்கள் அழைத்துவரப்பட்டனர்.
பின்னர் செஸ் ஒலிம்பிக் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் FIDE கொடிக்கப்பட்டு அடுத்து 45 வது செஸ் ஒலிம்பியாடு நடக்க உள்ள ஹங்கேரி நாட்டிடம் செஸ் கொடி வழங்கப்பட்டது ஒலிம்பியாட் நிகழ்ச்சி நிறைவடைந்தது குறிக்கும் வகையில் ஜோதி அணைக்கப்பட்டது.