வேலூர் ஆகஸ்ட், 9
பேரணாம்பட்டு தாலுகா அரவட்லா மலை கிராம ஊராட்சியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அரவட்லா ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமாரி தலைமை தாங்கினார்.
மேலும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் கலந்து கொண்டு பழங்குடியினர், மற்றும் நூறு நாள் திட்ட பணியாளர்கள், மலை கிராம பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் சுகாதாரமாக எவ்வாறு இருப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 250 பேருக்கு நாப்கின்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் நேதாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.