நெல்லை ஆகஸ்ட், 9
பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் முன்பு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே நெல்லை மாநகரப் பகுதியில் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பெருமாள் முன்னிலையில் 1,2,3,12,13,14,30 ஆகிய வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தேசிய கொடிகள் வழங்கப்பட்டு வருகிறது.