Spread the love

நெல்லை ஆகஸ்ட், 8

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி வருகிற 11-ம் தேதி தொடங்கி 14-ம்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது11-ம் தேதி முதல் நாள் ஆண்கள் பிரிவு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார்.

மேலும் பெண்கள்களுக்கான போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைக்க உள்ளார். 12-ம் தேதி ஆண்களுக்கான போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பனும், பெண்களுக்கான போட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைக்க உள்ளனர்.

இதில் அமைச்சர் மனோதங்கராஜ் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். 13-ம் தேதி ஆண்கள் பிரிவிற்கான போட்டியை அமைச்சர் தங்கம் தென்னரசு, பெண்களுக்கான போட்டியை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தொடங்கிவைக்க உள்ளனர். 14-ம் தேதி ஆண்கள் பிரிவு போட்டியை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு திமுக இளைஞரணி அமைப்பாளர் சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கி பேசுகிறார். கபடி போட்டியை 5 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானத்தில் கேலரி வசதி அமைக்கப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஜெகதீஷ் ஏற்பாடு செய்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *