நெல்லை ஆகஸ்ட், 8
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் கோட்டையடி, சமத்துவபுரம் , அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து 4 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தை வள்ளியூர் போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தயாசங்கர் தலைமையில் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுடனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வள்ளியூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் யோகேஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.