நெல்லை ஆகஸ்ட், 9
நெல்லை மாவட்டம் அம்பை
அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காணி சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி இப்பகுதியை சேர்ந்த காணி பழங்குடியினரின் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது
இந்த நிலையில் இன்று உலக தினத்தை முன்னிட்டு உண்டு உறைவிட பள்ளியில் உலக ஆதிவாசிகள் தினவிழா தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அரியலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இருளர், மலையாளி, காணி உள்ளிட்ட பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வி.கே.புரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
தொடர்ந்து விழாவில் தமிழக ஆதிவாசி கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் காணி பேசுகையில், உலக ஆதிவாசிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ம் தேதி கொண்டாடப்படுகிறது. மத்திய மாநில செயல்படுத்தும் அரசின் திட்டங்கள் எதுவும் மலைவாழ் மக்களுக்கு சரியான கிடைப்பதில்லை, ஆதிவாசி மக்களுக்கு உதவிகள், நலதிட்டங்கள் சரியான முறையில் கிடைப்பதற்கு கூட்டமைப்பு தான் உதவி செய்ய வேண்டும் என்றார். முன்னதாக பழங்குடியின போராளி பிர்ஷா முண்டாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.