Category: விருதுநகர்

செங்கோட்டை-மயிலாடுதுறை சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு.

விருதுநகர் அக், 26 தீபாவளியொட்டி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு ராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரெயில் இன்று முதல் தொடங்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து வந்த சிறப்பு ரயிலுக்கு ராஜபாளையத்தில்…

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை.

விருதுநகர் அக், 25 ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 1,243 பேருக்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சீருடை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விருதுநகர் அக், 23 விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரியாபட்டி ஊராட்சி…

காவல்துறையினர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா.

விருதுநகர் அக், 20 விருதுநகர் ஆயுதப்படை காவல்துறை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. 98 பேர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றனர். இவ்விழாவிற்கு தமிழக சிலை தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர்…

தொடர்மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை.

விருதுநகர் அக், 19 வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற…

அருப்புக்கோட்டை பகுதியில் உரமிடும் பணிகள் ஆரம்பம்.

விருதுநகர் அக், 17 அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக கம்பு, சோளம், ஊடுபயிர்களாக மொச்சை, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் பருவமழையை நம்பி ஆடி மற்றும் ஆவணி…

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி ஸ்கேட்டிங் நிகழ்ச்சி.

விருதுநகர் அக், 16 விருதுநகரில் நோவா உலக சாதனை பதிவிற்காக 8 வயது முதல் 15 வயது வரையிலான 75 மாணவர்கள் ஹெல்மெட் அணிதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 8 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனர். இந்த சாதனை…

நரிக்குடி அருகே புதிய தார்ச்சாலை.

விருதுநகர் அக், 14 விருதுநகர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியாகவும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஆரம்பப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இ்ந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் அக், 13 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விருதுநகரில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோர் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்…

ஊருணியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு.

விருதுநகர் அக், 12 காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள சின்னக்குளம் ஊருணியை தூர்வார வேண்டும் என்று மல்லாங்கிணறு, முடியனூர் பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மல்லாங்கிணறு பேரூராட்சி சின்னகுளம் ஊருணியை மேம்பாடு செய்ய…