விருதுநகர் அக், 20
விருதுநகர் ஆயுதப்படை காவல்துறை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. 98 பேர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றனர்.
இவ்விழாவிற்கு தமிழக சிலை தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் தினகரன் தலைமை தாங்கி பயிற்சி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அவர் சிறப்பாக பயிற்சி பெற்ற காவல்துறையினருக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கினார்.