Category: விருதுநகர்

மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை.

விருதுநகர் செப், 2 தேசிய விளையாட்டு தினத்தையொட்டி சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்களுக்கு 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம்…

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை. நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்.

விருதுநகர் செப், 1 அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டம் அருப்புக்கோட்டை நகரசபையின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ராமலிங்கம்…

மாரியம்மன் கோவிலில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணியை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடக்கம்.

விருதுநகர் ஆக, 31 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.…

காவல்துறையினர் கொடி அணி வகுப்பு ஊர்வலம்.

விருதுநகர் ஆக, 31 ராஜபாளையத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறையினர் சார்பில் நேற்று மாலை கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமை தாங்கினார். இதில் டவுன் தாலுகா ஆய்வாளர்கள்,…

விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்.

விருதுநகர் ஆக, 30 விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வத்திராயிருப்பு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வழிகாட்டுதலின் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியில் வத்திராயிருப்பு பகுதியில்…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி.

விருதுநகர் ஆக, 29 ஆலங்குளம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டை இணைப்பு வாக்காளர் அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்…

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு.

விருதுநகர் ஆக, 27 வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மலை ஏறிச்சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த…

வத்திராயிருப்பில் குறுவட்ட அளவிலான கபடி போட்டி.

விருதுநகர் ஆக, 26 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான வத்திராயிருப்பு ஒன்றிய அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான கபடி மற்றும் தடகளப்போட்டிகள் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட…

அம்மா உணவகத்தில் மேயர் ஆய்வு

விருதுநகர் ஆக, 26 சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அம்மா உணவகத்தில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் மற்றும்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

விருதுநகர் ஆக, 25 இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதனைதொடர்ந்து நேற்று 11 உண்டியல்கள், ஒரு கால்நடை மற்றும் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய…