Spread the love

விருதுநகர் ஆக, 27

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மலை ஏறிச்சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாணிப்பாறையில் வனத்துறை வாசல் முன்பு குவிந்தனர். வாசல் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர். ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் அமாவாசை வழிபாடு நடைபெற்றது.

பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *