Category: நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு.

நாமக்கல் நவ, 3 நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதில் தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5…

கோழிப்பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்.

நாமக்கல் அக், 31 நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகள், வடமாநிலங்கள்…

நாமக்கல்லில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

நாமக்கல் அக், 29 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம், வேலைவாய்ப்பு, சுய தொழில், வங்கிக் கடன் உதவி, முதியோர் ஓய்வூதியம்…

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் அக், 22 அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராமசாமி முன்னிலை வகித்தார். முடிக்கப்பட்ட 18 மாத பஞ்ச…

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை.

நாமக்கல் அக், 19 குமாரபாளையம், கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும்நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வசித்த சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த…

கொக்குவாரி காட்டாற்றில் சீரமைப்பு பணிகள் ஆய்வு.

நாமக்கல் அக், 18 நாமக்கல் அருகே உள்ள கொக்குவாரி சிங்களங்கோம்பை காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். கொல்லிமலை பகுதியில் இந்த ஆண்டு தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொல்லிமலை பகுதியை…

தமிழகத்தில் 5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் பேட்டி.

நாமக்கல் அக், 17 நாமக்கல் அருகே வினைதீர்த்தபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 3, 4 மாதங்களுக்கு…

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு.

நாமக்கல் அக், 15 நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல்…

3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு. வானொலி ஆராய்ச்சி நிலையம் தகவல்.

நாமக்கல் அக், 12 நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.…

மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்.

நாமக்கல் அக், 8 நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகள விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. ஆண்களுக்கான தடகள போட்டிகளை மாவட்ட ஆட்சியர்…