நாமக்கல் அக், 8
நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகள விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. ஆண்களுக்கான தடகள போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்ராஜ், சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தய போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் கயிறு ஏறுதல் உள்பட 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள் 900-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர்.