நாமக்கல் ஜூன், 1
நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 80 லட்சம் முட்டைகள் வரை ஏற்றுமதியாகி வருகிறது. வழக்கமாக அரபு நாடுகளுக்கு தான் அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்வது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டால், இந்தியாவில் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.